தமிழ்த் திரட்டி இயங்கும் முறை
அனைவருக்கும் வணக்கம்!
தமிழ்த் திரட்டி ஒரு இணையச் செயலி.
திரட்டியில் ஒருவர் தனது வலைப்பதிவை இணைத்துக் கொள்ள, தங்கள் பெயர், தங்கள் வலைத்தளத்தின்
பெயர், வலைத்தளத்தின் முகவரி ( Blog / wordpress/ website address) தங்கள் இமெயிலை
( email address) தெரிவிக்க வேண்டும்.
அதற்கான ஆன்லைன் படிமங்கள் வலைத்தளத்தில் தரப்பட்டிருக்கின்றன.
அதனை அடிப்படையாகக் கொண்டு, அவரது வலைத்தளம் திரட்டியில் இணைக்கப்படும். அவரது வலைத்தளம் இணைக்கப்பட்ட விபரம் அவருக்கு இமெயிலில் தெரிவிக்கப்படும்.
அதன் பிறகு, அவர் தனது வலைத்தளத்தில் வெளியிடும் பதிவுகளுக்கு இடும் லேபிள்களில்
ஒன்று கண்டிப்பாக – தமிழ் திரட்டி – என இருக்க வேண்டும். ஒருவர் தனது பதிவுகளுக்கு
சிறுகதை, உரையாடல், பயணம் ஆகிய மூன்று லேபிள்கள்
இடுவதாக வைத்துக் கொண்டால், தமிழ்த் திரட்டியில் இணைக்க வேண்டுமென்றால்
சிறுகதை,உரையாடல்கள்,பயணம்,தமிழ் திரட்டி என – தமிழ் திரட்டி – லேபிளையும் சேர்த்து இட வேண்டும். அந்த
லேபிள்களுக்கு இடையே கமா மட்டும்தான் இருக்க வேண்டும். இடைவெளிகள் இருக்கக் கூடாது.
அப்படி இடப்படும் - தமிழ் திரட்டி - லேபிள் மூலமாக தமிழ் திரட்டி
அவரது பதிவுகளை சேகரித்து தமிழ்த் திரட்டி தளத்தில் காட்டத் தொடங்கும். தமிழ் திரட்டி
– என்னும் லேபிள் இல்லையென்றால் தமிழ்த் திரட்டியில் தெரியாது.
மேலும் – தமிழ் திரட்டி - உடன் சேர்த்து அவர் இடும்
லேபிள்களில்
இலக்கியம், அரசியல், சினிமா, சமூகம், புத்தகம், அனுபவம், நிகழ்வுகள் என்னும் லேபிள்கள் இட்டிருந்தால், தமிழ்த் திரட்டியில் அந்த குறிப்பிட்ட லேபிள்களுக்குரிய பகுதியிலும்
அவரது பதிவுகள் தெரியும்.
ஒருவரது வலைத்தளத்திலிருந்து வெளியாகும் சமீபத்திய
பதிவு ஒன்றை மட்டுமே தமிழ்த் திரட்டி காட்டும். அப்படி பல்வேறு வலைப்பக்கங்கள், வலைத்தளங்களில் இருந்து திரட்டும் சமீபத்திய பதிவுகளில் முதல்
25 பதிவுகளை மட்டுமே தமிழ்த் திரட்டி ஒரு சமயத்தில் காட்டும்.
ஒருவர் வெளியிட்ட பதிவு, எடுத்தவுடன் தமிழ்த் திரட்டியில் முதலாவதாகக் காட்சியளிக்கும்.
அடுத்து இன்னொரு புதிய பதிவு திரட்டப்பட்டவுடன் முதலாவதாக இருந்த பதிவு இரண்டாவதாக
கீழிறங்கும். இன்னொரு புதிய பதிவு வந்ததும், அது மூன்றாவது
பதிவாகிவிடும்.
தமிழ்த் திரட்டியின் மேல் வரிசையில் இருக்கும் மூன்று
கட்டங்களில், புதிதாக திரட்டப்பட்ட முதல்
மூன்று பதிவுகள் தெரியும். சிறப்பு கவனம் பெறும்.
நான்காவதாக ஆனதும் அந்த மூன்று கட்டங்களில் இருக்கும்
பதிவுகள் அதற்கு கீழே வரிசையாய் இருக்கும் 25 பதிவுகளில் நான்காவதாக இடம் பெற ஆரம்பிக்கும்.
மேலும் புதிய பதிவுகள் வர வர, அவரது பதிவு வரிசையில் கீழே சென்று கொண்டிருக்கும். 25-வதாக வரும் வரை அவரது பதிவை தமிழ்த் திரட்டியில் பார்க்க
முடியும். 26வது பதிவாக கீழிறங்கும்போது, தமிழ்த் திரட்டி
காட்டாது.
அவர் மீண்டும் வெளியிடும் பதிவை முதலாவதாகக் காட்டத்
தொடங்கும். இதுதான் தமிழ்த் திரட்டி இயங்கும் முறை.
தமிழ்த் திரட்டியைத் திறந்தவுடன் திரட்டப்பட்டப்பட்ட
பதிவுகளைக் காட்டாது. 1-லிருந்து 2-செகண்ட்கள் வரை ஆகும். பல்வேறு வலைத்தளங்களிலிருந்து
திரட்டிக் காட்டுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் அது.
யாரெல்லாம் எழுதுகிறார்கள், என்ன எழுதுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் புள்ளியாகவும், அதுகுறித்த உரையாடல்கள் எழும் வெளியாகவும் தமிழ்த் திரட்டி
நிச்சயம் இருக்கும். பதிவர்களும், வாசிக்கிறவர்களும்
அதிகரிக்க அதிகரிக்க ஒருவரின் பதிவு பல்வேறுத் தரப்பினரையும் சென்றடையும். இவைகள்தாம்
தமிழ்த் திரட்டியின் நோக்கம்.
மேற்கொண்டு தகவல்களுக்கும், விளக்கங்களுக்கும் tamizhthiratti@gmail.com -ஐத் தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி.
